தேனி, திண்டுக்கல் உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழை! – வானிலை ஆய்வு மையம்!

Webdunia
வியாழன், 27 மே 2021 (08:12 IST)
தமிழகத்தில் வெப்பசலனம் காரணமாக கடந்த சில நாட்களாக மழை பெய்து வரும் நிலையில் இன்றும் பல்வேறு மாவட்டங்களில் மழை பெய்ய உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இந்தியாவில் தொடர்ந்து டவ்தே, யாஸ் புயல்களால் பல பகுதிகளில் மழை பெய்து வரும் நிலையில் தமிழகத்தில் மேற்கு தொடர்சி மலை பகுதிகள் மற்றும் தென் மாவட்டங்களில் பலத்த மழை பெய்துள்ளது.

இந்நிலையில் வெப்பசலனம் காரணமாக இன்று தேனி, திண்டுக்கல், நீலகிரி உள்ளிட்ட மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும் நாளை மற்றும் நாளை மறுநாள் தென் மாவட்டங்களின் ஓரிரு பகுதிகளில் மழை பெய்யக்கூடும் என கூறப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்