மெட்ரோ ரயில் நிர்வாகத்துக்கு ஆண்டுக்கு 525 கோடி ரூபாய் நஷ்டம்… ஏற்றுக்கொள்வது யார் தெரியுமா?

Webdunia
திங்கள், 28 பிப்ரவரி 2022 (10:49 IST)
தமிழகத்தில் மெட்ரோ ரயில் நிர்வாகத்துக்கு ஆண்டுக்கு 525 கோடி ரூபாய் அளவுக்கு நஷ்டம் ஏற்படுவதாக தகவல் அறியும் சட்டத்தின் கீழ் தெரியவந்துள்ளது.

மத்திய மாநில அரசுகளின் கூட்டுத்திட்டமாக சென்னை மெட்ரோ ஆரம்பிக்கப்பட்டது. கடந்த ஆறு ஆண்டுகளாக மெட்ரோ ரயில் சென்னையில் இயக்கப்பட்டு வரும் நிலையில் ஆறு ஆண்டுகளாகவும் நஷ்டத்திலேயே இயங்குவதாக சொல்லப்படுகிறது.

தகவல் அறியும் சட்டத்தின் கீழ் இந்த் தகவல் மெட்ரோ ரயில் நிர்வாகத்திடம் இருந்து பெறப்பட்டுள்ளது. ’மெட்ரோ ரயில் இயக்கத்துக்கு ஆண்டுக்கு 812 கோடி ரூபாய் வரை செலவிடப்படுகிறது. ஆனால் வருமானமாக 287 கோடி ரூபாய்தான் கிடைக்கிறது. இதில் நஷ்டமாகும் 525 கோடி ரூபாயை தமிழக அரசுதான் ஏற்றுக்கொள்கிறது.’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அப்படி பார்க்கையில் 6 ஆண்டுகளில் சுமார் 3000 கோடி ரூபாய்க்கு மேல் தமிழக அரசு மெட்ரோ நிர்வாகத்துக்கு வழங்கி வந்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்