சரவெடி பட்டாசுகளை வெடித்தால் கடும் நடவடிக்கை! – தமிழக அரசு எச்சரிக்கை!

Webdunia
ஞாயிறு, 31 அக்டோபர் 2021 (10:04 IST)
தீபாவளிக்கு சரவெடி உள்ளிட்ட பட்டாசுகளை விற்க தடை விதிக்கப்பட்டுள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.

இந்தியா முழுவதும் நவம்பர் 4ம் தேதி தீபாவளி கொண்டாடப்படுகிறது. இதற்காக மக்கள் திண்பண்டங்கள், பட்டாசு வாங்குதல் போன்றவற்றை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் உச்சநீதிமன்றம் பேரியம் கலந்த பட்டாசுகள் மற்றும் சரவெடிகள் வெடிக்க தடை விதித்துள்ளது.

இதுகுறித்து தற்போது தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில் தமிழகத்தில் சாதாரண பட்டாசு விற்கவோ, வெடிக்கவோ தடையில்லை என்றும், ஆனால் பேரியம் கலந்த பட்டாசுகள், சரவெடிகள் விற்க, வெடிக்க தடை விதிக்கப்பட்டுள்ளதாகவும், மீறினால் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்