ஆம்புலன்சுக்கு ஏன் 108? தமிழிசை ஆன்மீக விளக்கம்!

Webdunia
திங்கள், 13 ஜூன் 2022 (12:11 IST)
சபரிமலை ஐயப்ப சேவா சமாஜத்தின் சார்பில் நடைபெற்ற ஹரிவராசனம் நூற்றாண்டு விழாவில் தமிழிசை சவுந்தரராஜன் கலந்துக்கொண்டார். அங்கு அவர் பின்வருமாறு பேசினார், 

 
ஹரிவராசனம் பாடலில் 366 எழுத்துக்கள் உள்ளதால் தினமும் ஓர் எழுத்து நம்மை காக்கிறது. அதேபோல் ஹரிவராசனம் பாடலில் 108 வார்த்தைகளும் உள்ளன. இந்த 108 என்ற எண் இந்து மதம், புத்த மதம், யோகக்கலை ஆகியவற்றில் மிகவும் சக்தி வாய்ந்தது 108 எண்ணாகும். அதனால் தான் உயிரை காக்கும் ஆம்புலன்சுக்கு கூட 108 என்று பெயர் வந்தது. 
 
சபரிமலையில் உள்ள ஐயப்ப சுவாமி கோவிலின் 18 படிகளை தாண்டினால் உடல் நலம், மனநலம் ஆகியவை மேம்படும். 18 படிகளையும் தாண்டிவிட்டால் வாழ்க்கையில் படிப்படியாக எதையும் தாண்டி விடலாம் என்ற வாழ்வியலை ஐயப்ப சுவாமி வழிபாடு நமக்கு சொல்லி கொடுக்கிறது. ஆக ஆன்மிகம் என்பது விஞ்ஞானம்தான் உடல் நலம்தான் மனநலம் என பேசினார். 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்