இரவுக்குப் பிறகு மழை படிப்படியாக குறையும்… தமிழ்நாடு வெதர்மேன் கணிப்பு!

Webdunia
திங்கள், 4 டிசம்பர் 2023 (14:01 IST)
வங்கக்கடலில் உருவான மிக்ஜாம் புயல் காரணமாக வரலாறு காணாத அளவுக்கு சென்னை, செங்கல்பட்டு மற்றும் திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. சென்னையில் அதிகபட்சமாக 34 செமீ வரை மழை பெய்துள்ளது. சென்னையின் பல பகுதிகளில் கனமழை பெய்து வெள்ளக் காடாக மாறியுள்ளன. பல இடங்களில் சாலைகளில் ஓடும் வெள்ளம் வாகனங்களை இழுத்துச் செல்லும் வீடியோக்கள் வெளியாகியுள்ளன.

பெருமழைக் காரணமாக சாலைப் போக்குவரத்து, மின்சார ரயில் போக்குவரத்து மற்றும் விமானப் போக்குவரத்து ஆகியவை பல இடங்களில் ரத்து செய்யப்பட்டுள்ளன.. பல இடங்களில் குடியிருப்புப் பகுதிகளுக்குள் வெள்ளம் சூழ்ந்து மக்கள் அவதிக்குள்ளாகியுள்ளனர். இதனால் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு அழைத்து செல்லப்பட்டு வருகின்றனர்.

இந்நிலையில் மிக்ஜாம் புயல் பற்றி தொடர்ந்து சரியான தகவல்களைக் கணித்து தரும் தமிழ்நாடு வெதர்மேன் ப்ரதீப் ஜான் சில இடங்களில் மாலைக்குப் பிறகும் சில இடங்களில் இரவுக்குப் பிறகும் மழை படிப்படியாக குறையும் என அறிவித்துள்ளார். நாளை காலை தென் ஆந்திர பகுதியில் புயல் கரையைக் கடக்கும் என்பதால் அங்கு கனமழை பெய்யும் என்றும், சென்னை உள்ளிட்ட மாவட்டங்களில் மழை படிப்படியாக குறையும் என்றும் அவர் அறிவித்துள்ளார். 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்