ஒரு ஆண்டில் பெய்ய வேண்டிய மழை ஒரே நாளில்.. மிதக்கும் காயல்பட்டினம்.. தமிழ்நாடு வெதர்மேன்..!

Webdunia
திங்கள், 18 டிசம்பர் 2023 (10:34 IST)
தூத்துக்குடி மாவட்டம் காயல்பட்டினம் என்ற பகுதியில் ஒரு ஆண்டில் பெய்ய வேண்டிய மழை ஒரே நாளில் பெய்து வந்ததை அடுத்து அந்த பகுதியே  வெள்ளத்தில் மிதந்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.  
 
இது குறித்து தமிழ்நாடு வெதர்மேன் தனது சமூக வலைதளத்தில் கூறியிருப்பதாவது: தூத்துக்குடி காயல்பட்டினத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 932 மி.மீ. மழை பெய்துள்ளது. இந்த அளவு ஒரு ஆண்டுக்கான பெய்யும் மழை அளவை விட அதிகம்
 
தூத்துக்குடியில் 1000 ஆண்டுகளில் ஒருமுறை நடக்கும் நிகழ்வாக இது இருக்கலாம். புயல் இல்லாமல், குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி கூட இல்லாமல் காற்று சுழற்சியில் இருந்து பெய்யும் மழை. 
 
கடந்த 24 மணி நேரத்தில் தமிழ்நாட்டில் சமவெளிப் பகுதிகளில் பதிவான அதிகபட்ச மழையும், 1992-ல் மாஞ்சோலையில் பதிவான 965 மி.மீ மழைக்கு அடுத்து இரண்டாவதாக அதிக மழை இதுதான் என தமிழ்நாடு வெதர்மேன் கூறியுள்ளார்.
 
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்