இன்று 8 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு

Webdunia
திங்கள், 25 அக்டோபர் 2021 (13:30 IST)
வடகிழக்கு பருவமழை காரணமாக இன்று 8 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 

 
தமிழகம் முழுவதும் கடந்த சில வாரங்களாக வெப்பசலனம் மற்றும் வளிமண்டல சுழற்சி காரணமாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இந்நிலையில் நாளைக்குள் தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
 
இந்நிலையில் வடகிழக்கு பருவமழை காரணமாக இன்று 8 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி நெல்லை, தூத்துக்குடி, ராமநாதபுரம், விருதுநகர், கரூர், புதுக்கோட்டை, திருப்பூர், திடுவாரூர் ஆகிய மாவட்டங்களில் மழை பெய்யக்கூடும். அதோடு அடுத்த 5 நாட்களுக்கு தமிழகம் மற்றும் புதுச்சேரியில் மழை தொடரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்