நாளைக்கு வடகிழக்கு பருவமழை; இன்று பல இடங்களில் கனமழை!

திங்கள், 25 அக்டோபர் 2021 (12:43 IST)
நாளைக்குள் தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்க உள்ள நிலையில் இன்று பல்வேறு மாவட்டங்களில் மழைபெய்து வருகிறது.

தமிழகம் முழுவதும் கடந்த சில வாரங்களாக வெப்பசலனம் மற்றும் வளிமண்டல சுழற்சி காரணமாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இந்நிலையில் நாளைக்குள் தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இந்நிலையில் இன்று புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை உள்ளிட்ட டெல்டா மாவட்டப்பகுதிகளில் இடியுடன் கூடிய கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்