தமிழகத்தில் நாளை மறுநாள் முதல் கனமழைக்கு வாய்ப்பு

Webdunia
வெள்ளி, 17 செப்டம்பர் 2021 (14:01 IST)
தமிழகத்தில் நாளை மறுநாள் முதல் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது என வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. 

 
தென்மேற்கு பருவக்காற்று மற்றும் வெப்ப சலனம் காரணமாக இன்று டெல்டா மாவட்டங்கள், புதுக்கோட்டை, மதுரை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்யும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 
 
அதோடு, கடலோர மாவட்டங்கள் மற்றும் அதனை ஒட்டிய உள் மாவட்டங்களில் மிதமான மழையும் பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதாவது டெல்டா மாவட்டங்களில் நாளை மறுநாள் முதல் 4 நாட்களுக்கு கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்