விஜய்சேதுபதி- நயன்தாரா பட புதிய அப்டேட்

வியாழன், 16 செப்டம்பர் 2021 (23:04 IST)
விஜய் சேதுபதி – நயன்தாரா நடிப்பில் உருவாகிவரும் ’காத்து வாக்குல ரெண்டு காதல்’ படத்தின் அப்டேட் வெளியாகியுள்ளது.

விஜய் சேதுபதி மற்றும் நயன்தாரா ஆகிய இருவரும் ஏற்கனவே ’நானும் ரவுடிதான்’ ‘இமைக்கா நொடிகள்” ஆகிய படங்களில் இணைந்து நடித்துள்ள நிலையில் தற்போது மூன்றாவது முறையாக ’காத்துவாக்குல ரெண்டு காதல்’ என்ற படத்தில் நடிக்க உள்ளனர் .

இந்த படத்தில் நடிகை சமந்தாவும் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இந்த படத்தின் பெரும்பாலான காட்சிகள் படமாக்கப்பட்டு விட்ட நிலையில்  விரைவில் இப்படத்தின் போஸ்ட் புரொடெக்சன் பணிகள் நடைபெறும் எனக் கூறப்பட்டது.

இந்நிலையில், காத்து வாக்குல ரெண்டு காதல் படத்தின் 2 வது சிங்கில் #TwoTwoTwo இன்னும் 2 நாட்களில் வெளியாகும் என இப்படத்தின் இசையமைப்பாளர் அனிருத் தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.  

#TwoTwoTwo in two days :)

A @VigneshShivN special directorial and lyrical

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்