பங்குச் சந்தை கடந்த திங்கட்கிழமை உள்பட இந்த வாரம் முழுவதுமே மோசமாக சரிந்து வரும் நிலையில் இன்று மீண்டும் சரிந்து உள்ளது முதலீட்டாளர்களுக்கு அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது. சமீபத்தில் சென்செக்ஸ் 1200 புள்ளிகள் சரிந்ததால் லட்சக்கணக்கான முதலீட்டாளர்கள் நஷ்டம் அடைந்த நிலையில், இன்றும் சரிவை சந்தித்துள்ளது.
இன்று பங்குச்சந்தை வர்த்தகம் சற்றுமுன் தொடங்கிய நிலையில், இன்றும் பங்குச்சந்தை சரிந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளன. மும்பை பங்குச்சந்தை சென்செக்ஸ் 269 புள்ளிகள் சரிந்து 77886 என்ற புள்ளிகளில் வர்த்தகம் ஆகி வருகிறது. அதே போல், தேசிய பங்குச்சந்தை நிஃப்டி 84 புள்ளிகள் குறைந்து 23,609 என்ற புள்ளிகளில் வர்த்தகம் ஆகி வருகிறது.
இன்றைய பங்குச்சந்தையில் பஜாஜ் ஆட்டோ, இன்போசிஸ், ஆசியன் பெயிண்ட், ஹிந்துஸ்தான் லீவர், ஐடிசி, பிரிட்டானியா, பாரதி ஏர்டெல், டாக்டர் ரெட்டி உள்ளிட்ட பங்குகள் உயர்ந்துள்ளது. அதேபோல், ஆக்சிஸ் வங்கி, டி.சி.எஸ், டைட்டான், இண்டஸ் இண்ட் வங்கி, சிப்லா, ஹீரோ மோட்டார், ஐசிஐசிஐ வங்கி, ஹெச்.எல்.டெக்னாலஜி, ஹெச்டிஎஃப்சி வங்கி உள்ளிட்ட பங்குகள் குறைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன.
பங்குச்சந்தை இன்னும் சில நாட்களுக்கு ஏற்ற இறக்கத்துடன் இருக்கும் என்பதால், புதிதாக முதலீடு செய்பவர்களும், ஏற்கனவே முதலீடு செய்து கொண்டிருப்பவர்களும் தகுந்த பங்குச்சந்தை நிபுணர்களிடம் ஆலோசனை பெற்று முதலீடு செய்யுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.