பிளாஸ்டிக் கழிவுகளை துணிகளாக மாற்றிய சிறுவன்: குவியும் பாராட்டுக்கள்

Webdunia
வெள்ளி, 17 செப்டம்பர் 2021 (13:47 IST)
பிளாஸ்டிக் கழிவுகளை துணிகளாக மாற்றிய சிறுவன்: குவியும் பாராட்டுக்கள்
இந்தியா உள்பட உலகம் முழுவதும் பிளாஸ்டிக் கழிவு பொருட்கள் சுற்றுச்சூழலுக்கு பெரும் சவாலாக இருந்து வரும் நிலையில் பிளாஸ்டிக் கழிவுகளை தரமான துணிகளாக மாற்றி 17 வயது சிறுவன் சாதனை செய்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 
 
ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த 17 வயது சிறுவன் ஆதித்யா. இவர் சுற்றுச்சூழல் மேம்பாட்டுக்கு தன்னால் முடிந்த உதவியை பிளாஸ்டிக் கழிவு பொருட்களிலிருந்து துணி தயாரிக்க முடிவு செய்தார் 
 
பிளாஸ்டிக் கழிவுகளிலிருந்து நூல் செய்து அந்த நூலின் மூலம் தரமான துணியை தயாரித்துள்ளார். சீன தொழில்நுட்பத்தில் உருவாகியுள்ள இந்த துணி மிகவும் தரமான இருப்பதாக அனைவரும் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்
 
மேலும் இந்த தொழில் காரணமாக தனக்கும் தன்னை சுற்றி உள்ளவர்களுக்கும் வேலைவாய்ப்பும் கிடைக்கிறது என்று அந்த சிறுவன் கூறியுள்ளார். இதனையடுத்து அந்த சிறுவனுக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது
 
 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்