சாதித்த ஸ்டாலின் பேரன் - குதூகலத்தில் குடும்பம்!

Webdunia
வெள்ளி, 27 ஆகஸ்ட் 2021 (15:39 IST)
நடிகரும் அரசியல்வாதியுமான உதயநிதி ஸ்டாலின்  தற்போது தமிழ்நாடு சட்டமன்ற உறுப்பினராக உள்ளார். இவர் 2002 ஆண்டு கிருத்திகா என்ற கல்லூரி தோழியை காதலித்து பெற்றோர் சம்மதத்துடன் திருமணம் செய்துக்கொண்டார். 
 
இவர்களுக்கு இன்பன் என்ற மகனும் தன்மயா என்ற மகளும் இருக்கின்றனர். இதில் மகன் இன்பன் உதயநிதி மணிப்பூர் மாநிலத்தைச் சேர்ந்த நெரோகா கால்பந்து அணிக்காக தேர்வாகியுள்ளார். இந்தியாவில் நடைபெறும் மிகவும் முக்கியமான தொழிற்முறை கால்பந்து தொடரான இதன் ஐ-லீக் தொடருக்கான வீரர்கள் ஒப்பந்தம் செய்யும் படலம் தற்போது நடைபெற்று வருகிறது. இதில் தமிழ்நாடு முதல்வரின் பேரனும், உதயநிதி ஸ்டாலினின் மகனுமான இன்பநிதி தேர்வாகியுள்ளார். இதையடுத்து அவரின் குடும்பம் பெரும் மகிழ்ச்சியில் உள்ளது. 
 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்