மீண்டும் தொடங்கும் ஆர்ட்டிகிள் 15 படத்தின் படப்பிடிப்பு!

திங்கள், 16 ஆகஸ்ட் 2021 (11:33 IST)
உதயநிதி நடிப்பில் உருவாகும் ஆர்ட்டிகிள் 15 படத்தின் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு செப்டம்பர் மாதம் தொடங்க உள்ளது.

இந்தியில் வெளியாகி ஹிட் அடித்த் ஆர்ட்டிகிள் 15 படத்தின் தமிழ் ரீமேக்கில் உதயநிதி ஸ்டாலின் நடிக்க கனா இயக்குனர் அருண்ராஜா காமராஜா இயக்க இருந்தார். அந்த படம் தேர்தல் காரணமாக தொடங்கப்படாமல் இருந்த நிலையில் படப்பிடிப்பு சில மாதங்களுக்கு முன்னர் தொடங்கியது. இந்த படத்தை போனி கபூர் தயாரிக்க, கனா இயக்குனர் அருண் ராஜா காமராஜ் இயக்கி வருகிறார்.

முதல் கட்ட படப்பிடிப்பு பொள்ளாச்சியில் நடந்த நிலையில் கொரோனா பாதிப்பால் இயக்குனர் பாதிக்கப்பட்டதால் படப்பிடிப்பு நிறுத்தப்பட்டது. அதன் பின்னர் செப்டம்பர் மாதம் மீண்டும் தொடங்க உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்