கூடுதலாக 30,000 அம்போடெரிசின் பி மருந்துகள் தேவை!

Webdunia
ஞாயிறு, 6 ஜூன் 2021 (14:51 IST)
தமிழக அரசின் சார்பில் கூடுதலாக 30,000 மருந்துகளை ஒதுக்கீடு செய்ய கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாகவும் தமிழக சுகாதாரத் துறை தகவல். 

 
கொரோனா வைரஸ் பாதிப்பிலிருந்து இன்னும் மக்கள் விடுபடாத நிலையில் அடுத்ததாக கருப்பு பூஞ்சை, வெள்ளை பூஞ்சை, என இரண்டு புதிய நோய்கள் பரவி வருவது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
 
இந்நிலையில், தமிழகத்தில் இதுவரை 847 பேர் கருப்பு பூஞ்சை நோயால் பாதிக்கப்பட்டுள்ளதாக மருத்துவத்துறை தகவல் தெரிவித்துள்ளது.  கருப்பு பூஞ்சை நோய்க்காக ஆம்போடெரிசின் மருந்து 2,470 குப்பிகள் இதுவரை தமிழகம் வந்துள்ளது என கூறப்பட்டுள்ளது. 
 
ஆம், ஜூன் 2-ம் தேதி நிலவரப்படி கருப்பு பூஞ்சையால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 518 ஆக இருந்த நிலையில் கடந்த மூன்று நாட்களில் நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 847 ஆக அதிகரித்துள்ளது. 
 
தொடர்ந்து நோய் பாதிப்புகள் அதிகரித்து வருவதால் அம்போடெரிசின் பி மருந்துக்கான தேவை அதிகரித்திருப்பதாகவும் தமிழக அரசின் சார்பில் கூடுதலாக 30,000 மருந்துகளை ஒதுக்கீடு செய்ய கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாகவும் தமிழக சுகாதாரத் துறை தகவல் தெரிவித்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்