8 மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழை!

ஞாயிறு, 6 ஜூன் 2021 (13:42 IST)
தமிழகத்தில் 8 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தகவல். 

 
கோடைக்காலம் முடிந்து தென்மேற்கு பருவமழை தொடங்கியுள்ள நிலையில் கேரளாவின் பல்வேறு பகுதிகளில் பலத்த மழை பெய்ய தொடங்கியுள்ளது. தென்மேற்கு பருவ காற்றால் தமிழகத்திலும் ஓரளவு மழை பெய்யும் என்றாலும் இன்னமும் வெப்பம் தாக்கி வருகிறது.
 
இந்நிலையில், தமிழகத்தில் 8 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. திருவள்ளூர், வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், தருமபுரி, கிருஷ்ணகிரி, திருவண்ணாமலை, சேலத்தில் மழைக்கு வாய்ப்பு என கூறப்பட்டுள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்