மத்திய அரசின் அலுவல் மொழியாக தமிழ் - பாடுபட துணிந்த ஸ்டாலின்

ஞாயிறு, 6 ஜூன் 2021 (12:21 IST)
தமிழ் உள்ளிட்ட அனைத்து மொழிகளும் மத்திய அரசின் அலுவல் மொழியாக மற்ற திமுக அரசு பாடுபடும் என முதல்வர் முக ஸ்டாலின் பேட்டி. 

 
மாநில வளர்ச்சி கொள்கை குழுவின் புதிய உறுப்பினர்கள் நியமனத்தை சற்றுமுன் தமிழக முதலமைச்சர் முக ஸ்டாலின் அவர்கள் அறிவித்தார். இந்த குழுவின் தலைவராக முதல்வர் முக ஸ்டாலின் அவர்களும் துணை தலைவராக பேராசிரியர் ஜெயரஞ்சன் அவர்களும் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். 
 
இதனைத்தொடர்ந்து முதல்வர் ஸ்டாலின் பேசியதாவது, தமிழ் உள்ளிட்ட அனைத்து மொழிகளும் மத்திய அரசின் அலுவல் மொழியாக மற்ற திமுக அரசு பாடுபடும். செம்மொழிக்கு மேலும் சிறப்பு சேர்க்க எத்திசையும் தமிழ் மணக்க திமுக அரசு தொடர்ந்து உழைக்கும். கல்வெட்டு காலம் முதல் கணினி காலம் வரை சிறப்புற்று விளங்கும் தமிழ்மொழிக்கு அணிகலனே செம்மொழி அந்தஸ்து என தெரிவித்துள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்