தமிழ், சமஸ்கிருதம், மலையாளம் பழமையான மொழிகள்: ஆளுனர் ரவி

Webdunia
ஞாயிறு, 11 டிசம்பர் 2022 (15:03 IST)
தமிழ் மலையாளம் சமஸ்கிருதம் ஆகியவை மிகவும் பழமையான மொழிகள் என தமிழக ஆளுநர் ரவி அவர்கள் தெரிவித்துள்ளார்.
 
சென்னை கிண்டி ஆளுநர் மாளிகையில் இன்று மகாகவி பாரதியாரின் 141வது பிறந்தநாள் தினம் கொண்டாடப்பட்டது. இதில் மகாகவி பாரதியாரின் உருவப்படத்திற்கு ஆளுநர் ரவி மரியாதை செலுத்தினார். அதன்பின் அவர் பேசியபோது, ‘இந்திய விடுதலைக்காக மட்டும் பாரதியார் போராடவில்லை என்றும் அவரது கனவை இளைஞர்களை காண வைத்தார் என்றும் பெண்கள் முன்னேற்றம் குறித்தும் பல பாடல்கள் எழுதியுள்ளார் என்றும் தெரிவித்துள்ளார்
 
மேலும் தோல்வியால் துவண்டு விடாதீர்கள் தொடர்ந்து முயற்சி செய்யுங்கள் நீங்கள் செய்யும் அனைத்தும் இந்திய நாட்டை உயர்த்தும் என்ற எண்ணம் கொள்ளுங்கள் என்றும் பாரதியார் இளைஞர்களுக்கு அறிவுரை கூறியதாகவும் கவர்னர் ரவி  தெரிவித்துள்ளார் 
 
மேலும் தமிழ் சமஸ்கிருதம் மலையாளம் ஆகிய மொழிகள் ஐரோப்பிய மொழிகளான ஆங்கிலம் போன்ற மொழிகளை விட பழமையானது என்றும் அவர் கூறினார்
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்