முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு உடல்நலக்குறைவு.. ஓய்வெடுக்க மருத்துவர்கள் வலியுறுத்தல்..!

Webdunia
சனி, 4 நவம்பர் 2023 (16:09 IST)
தமிழக முதலமைச்சர் மு க ஸ்டாலின் அவர்களுக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டுள்ளதாகவும், அவர் ஓய்வெடுக்க மருத்துவர்கள் வலியுறுத்தியதாக தகவல் வெளியாகியுள்ளன 
 
தமிழக முதலமைச்சர் முக ஸ்டாலின் அவர்களுக்கு நேற்று முதல் இருமல் மற்றும் காய்ச்சல் அறிகுறி தென்பட்டுள்ளதாக தெரிகிறது. மேலும் அவருக்கு வைரஸ் காய்ச்சல் இருப்பதும் இன்று காலை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. 
 
இதனை அடுத்து சில நாட்கள் அவர் முழு ஓய்வு எடுக்க வேண்டும் என்று மருத்துவர்கள் வலியுறுத்தியதாக தகவல் வெளியாகியுள்ளன.  இதனால் முதலமைச்சர் மு க ஸ்டாலின் ஓய்வு எடுக்க வாய்ப்பு இருப்பதாகவும் அவருடைய முதலமைச்சர் பதவியை உதயநிதி அல்லது வேறு ஒருவருக்கு மாற்றப்பட வாய்ப்பு இருப்பதாகவும் அரசியல் வட்டாரங்கள் கூறுகின்றன
 
ஆனால் அதே நேரத்தில்  காய்ச்சல் மட்டுமே இருப்பதால் அவர் சிகிச்சை பெற்றுக் கொண்டே முதல்வர் பணியையும் கவனிப்பார் என்றும் கூறப்பட்டு வருகிறது.
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்