கர்ப்பிணி நடிகை மாரடைப்பால் மரணம்.. கருவில் இருந்த குழந்தையை மீட்ட மருத்துவர்கள்..!

வியாழன், 2 நவம்பர் 2023 (12:02 IST)
கேரள நடிகை ஒருவர் நிறைமாத கர்ப்பிணியாக இருந்த நிலையில் திடீரென மாரடைப்பு காரணமாக மரணமடைந்தார். இந்த நிலையில் மருத்துவர்கள் மிகவும் கஷ்டப்பட்டு அவரது வயிற்றில் இருந்த கருவை காப்பாற்றியுள்ளனர்.

கேரளாவை சேர்ந்த பிரபல நடிகை பிரியா. 35 வயது ஆன இவர் சமீபத்தில் கர்ப்பமான நிலையில் அவருக்கு இன்னும் ஒரு சில நாட்களில் குழந்தை பிறக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது.

இந்த நிலையில் நடிகை பிரியாவுக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டதை அடுத்து அவர்  மருத்துவமனைக்கு கொண்டு செல்ல முன்னர் காலமானார். இதையடுத்து குழந்தையை காப்பாற்ற வேண்டும் என்று மருத்துவர்கள் தீவிர முயற்சி செய்து நிறைமாத கர்ப்பிணியான ப்ரியாவின் கருவில் இருந்த குழந்தையை மருத்துவர்கள் மீட்டனர்.

தற்போது அந்த குழந்தை அவசர சிகிச்சை பிரிவில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் அந்த குழந்தையின் உடல்நிலை சீராக இருப்பதாகவும் கூறப்படுகிறது. இந்த தகவல் மலையாள திரையுலகில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Edited by Mahendran

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்