கவிஞர் கலைமாமணி பிறைசூடன் மறைவு - ஸ்டாலின் இரங்கல்

Webdunia
சனி, 9 அக்டோபர் 2021 (09:27 IST)
பிரபல திரைப்பட பாடலாசிரியரும், கவிஞருமான பிறைசூடன் தனது 65 வது வயதில் இன்று காலமானார்.
 
பிறைசூடன் தமிழில் இதுவரை 400க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் 1400 பாடல்களை எழுதியுள்ளார். இவரது மறைவிற்கு தமிழக முதல்வர் முக ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். அவர் தனது டிவிட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளதாவது, 
 
நல்ல பாட்டை மட்டுமே எழுதுவது என்று கங்கணம் கட்டிக்கொண்டு எழுதிக்கொண்டிருக்கும் என்  ஊர்க்காரர், உடன்பிறப்பு, என தலைவர் கலைஞரால் புகழப்பட்டவர். திருவாரூர் மண்ணிலிருந்து புறப்பட்டுத் திரையிசையில் தனக்கெனத் தனியிடம் பிடித்த கவிஞர் கலைமாமணி பிறைசூடன் மறைவு அதிர்ச்சியளிக்கிறது.
 
பல தலைமுறை இசையமைப்பாளர்களுடன் பணிபுரிந்து காலத்தால் அழியாத ஆயிரக்கணக்கான பாடல்களை எழுதிய அவரது மறைவு தமிழ்த்திரையுலகுக்குப் பேரிழப்பாகும். அவரை இழந்து வாடும் குடும்பத்தினர், ரசிகர்கள் அனைவருக்கும் எனது ஆழ்ந்த இரங்கல். 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்