ஆர்.எஸ்.எஸ். பேரணிக்கு சென்னை உயர்நீதிமன்றம் அனுமதி அளித்ததை எதிர்த்து தமிழ்நாடு அரசு சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது என்பதை ஏற்கனவே பார்த்தோம்.
இந்த நிலையில் இந்த மேல்முறையீட்டு மனு இன்று விசாரணைக்கு வந்தபோது, உயர்நீதிமன்றத்தில் விசாரணை நடைபெறும்போது உச்ச நீதிமன்றத்தில் ஏன் மேல்முறையீடு என நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.
அப்போது, ஆர்.எஸ்.எஸ். தரப்பு அவமதிப்பு வழக்கு தொடர்ந்துள்ளதால், உச்ச நீதிமன்றம் இதில் தலையிட வேண்டும் என தமிழ்நாடு அரசு தரப்பில் பதில் அளிக்கப்பட்டது.
இதனையடுத்து உயர்நீதிமன்ற வழக்குகளின் ரோஸ்டர் அட்டவணையைத் தாக்கல் செய்ய உத்தரவு பிறப்பித்த உச்ச நீதிமன்றம், இந்த மேல்முறையீட்டு மனு மீதான விசாரணையை நவம்பர் 6ம் தேதிக்கு ஒத்திவைத்தது.