ஜல்லிக்கட்டுக்கு ஆதரவு தெரிவித்து தங்க பதக்கத்தை திருப்பி கொடுத்த மாரியப்பன்!

Webdunia
சனி, 21 ஜனவரி 2017 (12:36 IST)
தமிழகத்தில் ஜல்லிக்கட்டை நடத்த வேண்டும். பீட்டாவை தடை செய்ய வேண்டும். காட்சிப் படுத்தப்பட்ட விலங்குகள்  பட்டியலிலிருந்து காளையை நீக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழகம் முழுவதும் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.

 
ஜல்லிக்கட்டுக்காக இளைஞர்களின் போராட்டம் தீவிரமடைந்துள்ள நிலையில், ஜல்லிக்கட்டு நடத்த அனுமதிக்கக் கோரி,  தமிழகம் முழுவதும் தொடர் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. உலகை உலுக்கும் வரலாற்றுப் புரட்சிகளில் தமிழகத்து மாணவர்கள், இளைஞர்களின் அறவழி போராடி வருகிறார்கள். ஜல்லிக்கட்டுக்கு அவசர சட்டம் கொண்டுவரவே முடியாது என  ஏமாற்றிய அரசாங்கங்களை அடிபணிய வைத்திருக்கிறார்கள்.
 
ரத்தம் சிந்தாமல் அகிம்சை முறைய்ல் சரித்திரம் படைத்து கொண்டிருக்கும் தமிழக இளைஞர்கள். இந்த நிலையில் ஜல்லிக்கட்டு  புரட்சிக்கு ஆதரவாக மாற்றுத் திறனாளிகளுக்கான பாராஒலிம்பிக்கில் உயரம் தாண்டுதலில் தங்கப் பதக்கம் வென்ற மாரியப்பன்  தம்முடைய பதக்கத்தை திருப்பித் தருவதாக அறிவித்து நெகிழ வைத்திருக்கிறார். 
 
ஜல்லிக்கட்டு புரட்சியில் தம்மை இணைத்துக் கொள்ளும் வகையில் மாற்றுத் திறனாளிகளுக்கான பாராஒலிம்பிக்கில் தங்கப்  பதக்கம் வென்ற மாரியப்பன், அதனை திருப்பி கொடுப்பதாக அறிவித்துள்ளார்.
அடுத்த கட்டுரையில்