தமிழகத்தில் கோடை மழை.. 7 மாவட்டங்களுக்கு மஞ்சள் அலர்ட்.. வானிலை ஆய்வு மையம்..!

Siva
வெள்ளி, 12 ஏப்ரல் 2024 (07:25 IST)
தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கோடை வெயில் கொளுத்தி வரும் நிலையில் இன்று ஏழு மாவட்டங்களில் மழை பெய்யும் என மஞ்சள் அலர்ட் விடுத்து வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது பொது மக்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

தமிழகம் முழுவதும் கடந்த சில நாட்களாக வெயில் கொளுத்தி வரும் நிலையில் சில மாவட்டங்களில் 100 டிகிரி செல்சியஸை தாண்டி வெப்பம் பதிவாகி இருப்பதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் வளிமண்டல கீழ் அடுக்கு காற்றின் திசை மாறுபாடு காரணமாக தமிழகம் புதுவை காரைக்கால் பகுதியில் இன்று இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது

குறிப்பாக தென் தமிழகத்தில் ஒரு சில இடங்களிலும் வட தமிழகத்தில் ஒரு சில இடங்களிலும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் இன்று லேசானது முதல் மிதமான மழை பெய்யும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது

 ஏப்ரல் 14 முதல் 16 வரை தமிழகத்தின் சில இடங்களிலும் புதுவை மற்றும் காரைக்காலில் ஏப்ரல் 17 ஆகிய தேதிகளில் மழை பெய்யும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மொத்தத்தில் இன்று முதல் அடுத்த ஐந்து தினங்கள் தமிழகம் முழுவதும் மிதமான மழை பெய்யும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது

மேலும் அடுத்த ஒரு மணி நேரத்தில் நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர், மயிலாடுதுறை, ராமநாதபுரம், திருநெல்வேலி, கன்னியாகுமரி ஆகிய ஏழு மாவட்டங்களில் மிதமான மழை பெய்யும் என மஞ்சள் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Edited by Siva
 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்