கொளுத்தி வரும் கோடை வெயில்.. சென்னை மக்களுக்கு நல்ல செய்தி சொன்ன தமிழ்நாடு வெதர்மேன்..!

Siva

புதன், 10 ஏப்ரல் 2024 (07:15 IST)
சென்னை உள்பட தமிழகம் முழுவதும் கோடை வெயில் கடந்த சில நாட்களாக கொளுத்தி வரும் நிலையில் சென்னையில் அடுத்த ஒரு வாரத்தில் படிப்படியாக வெப்பம் குறையும் என்று தமிழ்நாடு வெதர்மேன் தெரிவித்துள்ளார்.

தமிழ்நாட்டின் பல நகரங்களில் 100 டிகிரி செல்சியஸ் வெப்பம் பதிவாகி கொண்டிருக்கும் நிலையில் சென்னை மாநகரில் இயல்பை விட குறைவான வெப்பநிலை இருக்கும் என்றும் அதற்கு கிழக்கு காற்று தான் காரணம் என்று தெரிவித்துள்ளார்.

சென்னை மக்கள் வெளியே வர முடியாத அளவுக்கு வெப்பநிலை உச்சத்தில் இருக்கும் நிலையில் தமிழ்நாடு வெதர்மேனின் இந்த பதிவு தற்போது சென்னை மக்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஆனால் அதே நேரத்தில் கோடை காலங்களில் மிகவும் அதிகமாக வெப்பம் பதிவாகும் இடங்களில் ஒன்றாக சென்னை இருக்கும் என்றும் மே மாதத்தில் மிக அதிகமாக வெப்பநிலை பதிவாகும் இடமாக சென்னை இருக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவின் பல பகுதிகளில் வெப்ப அலைகள் மக்களை தாக்கி வரும் நிலையில் அடுத்த ஒரு வாரத்திற்கு மட்டும் சென்னையில் வெப்பநிலை குறையும் என்று கூறியிருப்பது தற்காலிக மகிழ்ச்சி தான் என்பது குறிப்பிடத்தக்கது.

Edited by Siva
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்