நேற்று பிரபல தெலுங்கு நடிகர் அல்லு அர்ஜுன் வீட்டில் கல் எரிந்ததாக ஆறு பேர் போலீசாரால் கைது செய்யப்பட்ட நிலையில், அவர்களுக்கு இன்று காலை ஜாமீன் கிடைத்துள்ளது. இது ரசிகர்கள் மத்தியில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.
புஷ்பா 2 திரைப்படத்தின் முதல் நாள் காட்சிக்கு சென்ற ரேவதி என்ற பெண், கூட்டம் நெரிசலால் மரணம் அடைந்ததை அடுத்து, அல்லு அர்ஜுன் கைது செய்யப்பட்டு, அதன் பின் ஜாமீனில் விடுதலை செய்யப்பட்டார்.
இந்த விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், நேற்று உயிரிழந்த பெண்ணின் மரணத்திற்கு நீதி கேட்டு, அல்லு அர்ஜூன் வீட்டை முற்றுகையிட்ட சிலர் திடீரென அவரது வீட்டில் கல்லை எரிந்ததாக வும், பூந்தொட்டிகளை உடைத்ததாகவும் கூறப்பட்டது.
இதுகுறித்து காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து ஆறு பேரை கைது செய்த நிலையில், இன்று அவர்கள் ஹைதராபாத் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டனர். இந்த நிலையில், ஆஜர்படுத்தப்பட்ட ஆறு பேருக்கும் ஹைதராபாத் நீதிமன்ற நீதிபதி ஜாமீன் வழங்கியுள்ளார்.