சுற்றுலா சென்றபோது ஆசிரியைக்கு முத்தம் கொடுத்த மாணவன்.. சஸ்பெண்ட் செய்த நிர்வாகம்..

Webdunia
சனி, 30 டிசம்பர் 2023 (13:24 IST)
பள்ளி மாணவர்களோடு ஆசிரியை சுற்றுலா சென்ற நிலையில்  பத்தாம் வகுப்பு மாணவர்களோடு ஆசிரியை போட்டோஷூட் எடுத்ததாகவும், அதில் ஆசிரியைக்கு மாணவர் ஒருவர் முத்தம் கொடுத்ததாகவும் தெரிகிறது. இதனை அடுத்து அந்த ஆசிரியை சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

கர்நாடக மாநிலத்தில் முருகமல்லா என்ற கிராமத்தில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியைச் சேர்ந்த மாணவர்கள் சுற்றுலா சென்றனர். அவர்களோடு ஆசிரியை புஷ்பலதாவும் சற்று இருந்தார்.

இந்த நிலையில் சுற்றுலா சென்ற இடத்தில் போட்டோஷூட் எடுத்த போது ஒரு மாணவன் ஆசிரியைக்கு முத்தமிடுவது போன்ற புகைப்படம் இணையத்தில் வைரல் ஆனது.

இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில் ஆசிரியை மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டது. இதனை அடுத்து கல்வி அதிகாரி சம்பந்தப்பட்ட ஆசிரியை மீது நடவடிக்கை எடுத்துள்ளனர். ஆசிரியை  புஷ்பலதா சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளதாக கல்வித்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது.

Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்