கிணற்றுக்குள் விழுந்த புள்ளி மான்:நீண்ட போராட்டத்துக்குப் பிறகு தீயணைப்புத் துறை உதவியுடன் மீட்ட வனத்துறையினர்!

J.Durai
திங்கள், 8 ஜூலை 2024 (14:13 IST)
கோவை பேரூர் அடுத்த தீத்திபாளையம், சிப்ஸ் கம்பெனிக்கு அருகில் சுமார் 150 அடி ஆழம் உள்ள கிணற்றில் புள்ளி மான் விழுந்து உள்ளதாக அப்பகுதி பொதுமக்கள் வனத் துறையினருக்கு தகவல் தெரிவித்து உள்ளனர்.
 
வனத்துறையினர் உடனடியாக சென்று பார்த்த போது ஹைவேக்கு சொந்தமான  சுமார் 150 அடி ஆழம் கொண்ட கிணற்றில் சுமார்  1 வயது பெண் புள்ளி மான் ஒன்று உள்ளே விழுந்தது கிடந்தது உறுதி செய்தனர்.  
 
பின்னர் மதுக்கரை வன அலுவலர் தலைமையில் கரடிமடை பிரிவு வனப் பணியளர்கள் மற்றும் வேட்டை தடுப்பு காவலர்கள் மற்றும் தீயணைப்பு துறை இணைந்து நீண்ட போராட்டத்திற்கு பின் கிணற்றில் இருந்து புள்ளி மானை நல்ல நிலையில் மீட்கப்பட்டு மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்டு பின் கரடிமடை வன பகுதியில் உள்ள காப்பு கட்டில் விடுவித்தனர்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்