உத்தரபிரதேசத்தில் நடக்க இருக்கும் கும்பமேளா விழாவை முன்னிட்டு கன்னியாகுமரியில் இருந்து சென்னை வழியாக கயாவுக்கு சிறப்பு ரயில் இயக்கப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
இந்த ரயில் கன்னியாகுமரியில் இருந்து வருகிற 6-ந் தேதி மற்றும் 20-ந் தேதிகளில் இரவு 8.30 மணிக்கு புறப்பட்டு நள்ளிரவு 1.10 மணிக்கு மதுரை ரயில் நிலையம் வந்தடைகிறது. மறுநாள் காலை 9 மணிக்கு சென்னை சென்றடைகிறது. நள்ளிரவு 1.30 மணிக்கு கயா சென்றடைகிறது.
மறுமார்க்கத்தில் இந்த சிறப்பு ரயில் கயாவில் இருந்து வருகிற 9-ந் தேதி மற்றும் 23-ந் தேதிகளில் இரவு 11.55 மணிக்கு புறப்பட்டு மறுநாள் மாலை 4 மணிக்கு சென்னை வந்தடைகிறது. இரவு 11.30 மணிக்கு மதுரை வந்தடைகிறது. நள்ளிரவு 3.50 மணிக்கு கன்னியாகுமரி சென்றடைகிறது.
அதேபோல, கன்னியாகுமரியில் இருந்து மதுரை, சென்னை வழியாக பனாரசுக்கு ஒரு சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது. இந்த சிறப்பு ரயில் கன்னியாகுமரியில் இருந்து வருகிற பிப்ரவரி மாதம் 17-ந் தேதி இரவு 8.30 மணிக்கு புறப்பட்டு நள்ளிரவு 1.10 மணிக்கு மதுரை ரயில் நிலையம் வந்தடைகிறது. மறுநாள் காலை 9 மணிக்கு சென்னை சென்றடைகிறது. இரவு 9.50 மணிக்கு பனாரஸ் ரயில் நிலையம் சென்றடைகிறது.
மறுமார்க்கத்தில் இந்த ரயில் பனாரசில் இருந்து வருகிற பிப்ரவரி மாதம் 20-ந் தேதி மாலை 6 மணிக்கு புறப்பட்டு மறுநாள் காலை 7.50 மணிக்கு சென்னை ரயில் நிலையமும், மாலை 3.15 மணிக்கு மதுரை ரயில் நிலையமும் வந்தடைகிறது. இரவு 9 மணிக்கு கன்னியாகுமரி ரயில் நிலையம் சென்றடைகிறது.