இன்று காலை 10 மணி வரை தமிழகத்தில் உள்ள ஆறு மாவட்டங்களில் மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னை வானிலை ஆய்வு மையம் மற்றும் இந்தியா வானிலை ஆய்வு மையம் அவ்வப்போது மழை குறித்த விவரங்களை தெரிவித்து வரும் நிலையில், இன்று காலை 10 மணி வரை மயிலாடுதுறை, நாகப்பட்டினம், தஞ்சாவூர், திருவாரூர், பட்டுக்கோட்டை மற்றும் ராமநாதபுரம் ஆகிய பகுதிகளில் மிதமான மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
மேலும் காரைக்கால் மற்றும் புதுச்சேரி பகுதிகளிலும் மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. வங்க கடலில் தோன்றிய காற்றழுத்த தாழ்வு மையம் ஒரு பக்கம் இருக்கும் நிலையில், அரபிக் கடலில் புதிதாக வளிமண்டல கீழ் அடுக்கு சுழற்சி உருவாகி இருப்பதை அடுத்து, தமிழகத்தில் ஜனவரி 4 ஆம் தேதி லேசான மழை முதல் மிதமான மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
சென்னையை பொருத்தவரை, இன்று வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும், மாலையில் சில இடங்களில் மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.