கோவை மாநகராட்சி சார்பில் சிறப்பு சொத்து வரி திருத்த முகாம்!

Webdunia
வியாழன், 25 மே 2023 (15:45 IST)
கோவை மாநகராட்சி வடக்கு மண்டலம் சரவணம்பட்டி பகுதியில் வார்டு எண் 4,10,11,21 ஆகிய நான்கு வார்டுகளுக்கு உட்பட்ட பகுதி பொதுமக்களுக்கா சிறப்பு சொத்து வரி திருத்த முகாம் நடைபெற்று வருகிறது. இம்முகாமில் சொத்து வரி மாற்றம் செய்தல், திருத்தங்கள் மேற்கொள்ளுதல் உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
 
இதில் கோவை மேயர் கல்பனா ஆனந்த்குமார், மாநகராட்சி ஆணையாளர் பிரதாப், துவக்கி வைத்து கோரிக்கை மனுக்கள் மீது உடனடியாக நடவடிக்கை மேற்கொண்டு சொத்து வரி திருத்த புத்தகங்களை வழங்கினர். தொடர்ந்து இம்முகாம் அப்பகுதியில் நடைபெற்று வருகிறது.
 
இந்நிகழ்வில் கோவை மாநகராட்சி துணை ஆணையாளர் சிவக்குமார், வடக்கு மண்டல தலைவர் கதிர்வேல் மாமன்ற உறுப்பினர்கள் கதிர்வேலுசாமி, பூங்கொடி, சிரவை சிவா, உதவி ஆணையர் மோகனசுந்தரி உதவி வருவாய் அலுவலர் மதிவண்ணன் உட்பட அரசுத்துறை அலுவலர்கள் பங்கேற்றனர்.இதுபோன்ற சிறப்பு சொத்துவரி முகாம்கள் பல்வேறு பகுதிகளில் நடத்தப்பட வேண்டும் என பொதுமக்கள் பலரும் கூறி வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்