தமிழக பட்ஜெட் மீதான பொது விவாதம் தொடங்குவது எப்போது என்பது குறித்த அறிவிப்பை சபாநாயகர் அப்பாவு அவர்கள் தெரிவித்துள்ளார். தமிழக பட்ஜெட் இன்று தாக்கல் செய்யப்பட்டதை அடுத்து இந்த கூட்டம் ஏப்ரல் 21ஆம் தேதி வரை நடைபெறும் என சபாநாயகர் அப்பாவு தெரிவித்துள்ளார். மேலும் மார்ச் 23ஆம் தேதி பட்ஜெட் மீதான பொது விவாதம் நடைபெறும் என்றும் இன்று நடைபெற்ற சட்டப்பேரவை அலுவல் ஆய்வு கூட்டத்தில் சபாநாயகர் அப்பாவு தலைமையில் முடிவெடுக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் இன்று நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல் ராஜன் அவர்கள் தாக்கல் செய்த பட்ஜெட்டுக்கு திமுக கூட்டணி கட்சிகள் வரவேற்பு தெரிவித்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
குறிப்பாக மகளிர் உரிமை தொகை திட்டம் என்ன ஆனது என்ற எதிர்க்கட்சிகளின் கேள்விக்கு இந்த பட்ஜெட்டில் அரசு முற்றுப்புள்ளி வைத்துள்ளது என்றும் கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் தலைவர் ஈஸ்வரன் பேட்டி அளித்துள்ளார்.