லாக்டவுன் முடியுதோ இல்லையோ... ஜூன் 1 இது கன்ஃபார்ம்!!

Webdunia
வெள்ளி, 29 மே 2020 (11:16 IST)
தென்மேற்கு பருவமழை கேரளாவில் ஜூன் 1 ஆம் தேதி தொடங்குகிறது என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 
 
நாளை மறுநாள் தென்கிழக்கு அரபிக்கடலில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்புள்ளதால் கேரளா உள்ளிட்ட தென்இந்திய மாநிலங்களில் தென்மேற்கு பருவமழை தொடங்குகிறது. 
 
மத்திய கிழக்கு,வடமேற்கு, தென்கிழக்கு அரபிக்கடலுக்கு மீனவர்கள் மீன்பிடிக்க செல்ல வேண்டாம் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. தென்மேற்கு பருவமழை தாமதமாக ஜூன் 5 ஆம் தேதி தொடங்கும் என கூறியிருந்த நிலையில் தற்போது தென்மேற்கு பருவமழை கேரளாவில் ஜூன் 1 ஆம் தேதி தொடங்குகிறது என இந்திய வானிலை மையம் அறிவிப்பு. 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்