இந்த வழக்கின் விசாரணையின்போது புலம்பெயர் தொழிலாளர்களின் ரயில் செலவை அவர்கள் கிளம்பும் மாநிலமோ அல்லது சென்று சேரும் மாநிலமோ ஏற்பதாகவும், உணவு மற்றும் குடிநீரும் ரயில்வே சார்பில் வழங்கப்படுவதாகவும் மத்திய அரசு பதிலளித்தது
இந்த நிலையில் புலம்பெயர் தொழிலாளர்களுக்கான பயண கட்டணத்தை அவர்களிடம் வசூலிக்கக் கூடாது என உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. மேலும் புலம்பெயர் தொழிலாளர்களுக்கான ரயில் கட்டண மற்றும் பேருந்து கட்டண செலவை அந்தந்த மாநில அரசுகளே ஏற்க வேண்டும் என்றும் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. உச்சநீதிமன்றத்தின் இந்த உத்தரவால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது