அரியர்ஸ் மாணவர்கள் தேர்ச்சி விவகாரம்: அண்ணா பல்கலை துணைவேந்தர் விளக்கம்

Webdunia
வெள்ளி, 4 செப்டம்பர் 2020 (16:05 IST)
அரியர்ஸ் மாணவர்கள் தேர்ச்சி விவகாரம்
கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக கல்லூரி மாணவர்களுக்கான செமஸ்டர் தேர்வுகள் நடத்த முடியாத காரணத்தால், இறுதியாண்டு செமஸ்டர் தேர்வு தவிர மற்ற அனைத்து செமஸ்டர் தேர்வுகளை மாணவர்கள் எழுத வேண்டாம் என்றும் அனைத்து மாணவர்களும் பாஸ் எனவும் தமிழக அரசு அறிவித்தது 
 
இந்த அறிவிப்புக்கு திடீரென சிக்கல் ஏற்பட்டது. அரியர்ஸ் மாணவர்களின் தேர்ச்சி செல்லாது என அகில இந்திய தொழில்நுட்ப கல்வி கழகம் தெரிவித்ததாகவும், தமிழக அரசின் இதுகுறித்த முடிவை ஏற்க மறுப்பு எனவும் தகவல் வெளியானது
 
மேலும் இதுகுறித்து அண்ணா பல்கலைக்கழகத்திற்கு அகில இந்திய தொழில்நுட்பக் கல்விக் கழகம் இமெயில் அனுப்பி உள்ளதாகவும் தகவல் வந்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இந்த நிலையில் இந்த விவகாரம் குறித்து அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் சூரப்பா விளக்கம் அளித்துள்ளார்
 
அரியர்ஸ் மாணவர்கள் தேர்வு நடத்தி தேர்ச்சி வழங்க வேண்டும் என்பதே அகில இந்திய தொழில்நுட்பக் கல்விக் கழகத்தின் விதி என்றும், அதனை மீறினால் பல்கலைக் கழகத்தின் அங்கீகாரம் கேள்விக்குறியாகும் என்றும் தெரிவித்துள்ளார்
 
மேலும் அரியர் மாணவர்களின் தேர்ச்சி செல்லாது என்று அகில இந்திய தொழில்நுட்பக் கழகம் மின்னஞ்சல் அனுப்பிய விவகாரத்தில் தமிழக அரசு இறுதி முடிவு எடுக்கும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்
 
அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் சூரப்பாவின் அறிவிப்பின்படி தமிழக அரசு என்ன முடிவு எடுக்கும் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்