இரு சக்கர வாகனத்தில் நுழைந்துகொண்டு வெளியே வரமறுத்த நல்ல பாம்பு !

Webdunia
சனி, 14 டிசம்பர் 2019 (08:35 IST)
தென்காசி மாவட்டத்தில் இரு சக்கர வாகனம் ஒன்றில் நுழைந்து கொண்டு ஒருமணிநேரமாக விளையாட்டுக் காட்டிய சம்பவம் நடந்துள்ளது.

தென்காசி மாவட்டத்தில் உள்ள  மேலகரம் பகுதியைச் சேர்ந்தவர் சக்திவேல். இவர் தனது வீட்டுக்கு வெளியே நிறுத்தி வைத்திருந்த இரு சக்கர வாகனத்தை எடுக்க வந்தபோது அதில் குட்டிப் பாம்பு ஒன்று இருப்பதைப் பார்த்துள்ளார். அதை வெளியேற்ற முயன்றபோது வாகனத்திற்குள் சென்று ஒளிந்துகொண்டது. சக்திவேல் எவ்வளவோ முயன்றும் பாம்பை வெளியே எடுக்க முடியவில்லை.

இதையடுத்து அவர் தீயணைப்புத் துறையினருக்கு தகவல் சொன்னார். உடனடியாக அங்கு வந்த தீயணைப்புத் துறையினர் ஒரு மணி நேரத்தேடலுக்குப் பிறகு இருசக்கர வாகனத்திலிருந்து பாம்பு உயிருடன் மீட்கப்பட்டது. மீட்கப்பட்ட பாம்பை வனப்பகுதியில் சென்று விட்டனர்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்