தலைமைச் செயலகத்தில் புகுந்த நல்ல பாம்பு .. பதறியடித்து ஓடிய ஊழியர்கள்

புதன், 11 செப்டம்பர் 2019 (16:17 IST)
சென்னை, தலைமைச் செயலக வளாகத்திற்குள்  நல்ல பாம்பு ஒன்று புகுந்தால், அங்குள்ள ஊழியர்கள் பதறியடித்து ஓடினர். இந்த சம்பவம் பெரும்  பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பாம்பு என்றால் படையும் நடுங்கும் என்று சொல்வார்கள். இந்நிலையில், இன்று, சென்னை தலைமைச் செயலகத்தில் உள்ள நான்காவது நுழைவாயிலில், ஒரு நல்ல பாம்பு படம் எடுத்தபடி நின்றிருந்தது. அதனைப் பார்த்த தலைமைச்செயலக ஊழியர்கள் பதறியடித்துக்கொண்டு ஓடினர்.
 
இதனையடுத்து, அந்தப் பாம்பு யாரையும் கடிப்பதற்கு முன், ஊழியர்கள், தீயணைப்புத் துறையினருக்குத் தகவல் கொடுத்தனர். இதையடுத்து அங்கு விரைந்து வந்த தீயணைப்புத்துறையினர், நல்ல  பாம்பை பிடிக்கும் முயற்சியில் இறங்கினர். இந்த சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்