விருதுநகர் மாவட்டம் தேவதானம் கிராமத்தைச் சேர்ந்தவர் கருப்பையா. நியாய விலைக் கடை ஊழியராகப் பணிபுரிந்து ஓய்வுபெற்றுள்ளார். ஓய்வுக்குப் பிறகு அந்த பகுதியில் ஊர்தலைவராக இருந்து வந்துள்ளார். மேலும் இவர் தென்காசி மக்களவை எம்,பி. திமுக எம்.பி.யின் சித்தப்பா என்பதால் அந்தப் பகுதியில் மிகவும் பிரபலமாக இருந்து வந்துள்ளார். இரு தினங்களுக்கு முன்னர் தனது வயலை மேற்பார்வையிட சென்ற இவர் நீண்ட நேரமாகியும் வீடு திரும்பவில்லை.
நீண்ட நேரமாகியும் அவரைக் காணவில்லை என்பதால் குடும்பத்தினர் பதற்றமடைந்துள்ளனர். நீண்ட நேரத்துக்குப் பிறகு வயலுக்கு அருகில் சடலம் ஒன்று கிடப்பதாக சொல்லியுள்ளனர். அங்கு சென்று பார்த்தபோது கருப்பையா சடலமாகக் கிடந்துள்ளார். அவரது உடலில் பல இடங்களில் வெட்டுக்காயங்கள் இருந்தன. இதையடுத்து சம்பவ இடத்துக்கு வந்த போலீஸார் உடலைக் கைப்பற்றி பிரேதப்பரிசோதனைக்கு அனுப்பியுள்ளனர்.