நெல்லை எக்ஸ்பிரஸ் ரயிலில் கொம்பேரி மூக்கன் பாம்பு: பயணிகள் பதட்டம்!

Webdunia
புதன், 18 ஆகஸ்ட் 2021 (20:48 IST)
நெல்லை எக்ஸ்பிரஸ் ரயிலில் திடீரென கொம்பேரி மூக்கன் பாம்பு புகுந்ததால் பயணிகள் மத்தியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது
 
ரயில்களில் பாம்பு புகுந்து பயணிகளை பயமுறுத்தும் நிகழ்ச்சி மிகவும் அரிதாகவே நடக்கும் என்பது தெரிந்ததே. இந்த நிலையில் சென்னை எழும்பூரில் இருந்து புறப்படும் நெல்லை எக்ஸ்பிரஸ் ரயிலில் உள்ள எஸ்1 என்ற பெட்டியில் கொம்பேரி மூக்கன் பாம்பு புகுந்ததால் பயணிகள் மத்தியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது
 
இதனை அடுத்து இது குறித்து தகவல் அறிந்த தீயணைப்பு துறையினர் விரைந்து வந்து பாம்பை பிடிக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். சுமார் 45 நிமிட போராட்டத்திற்கு பிறகு பாம்பை பிடித்து விட்டதாகவும் அதன்பின்னர் வனத்துறையிடம் ஒப்படத்துள்ளதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளன
 
எப்போதும் பரபரப்பாக இருக்கும் சென்னை எழும்பூர் - நெல்லை எக்ஸ்பிரஸ் ரயிலில் திடீரென கொம்பேறி மூக்கன் பாம்பு புகுந்தது பயணிகள் மத்தியில் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது
 
 
 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்