ஏப்ரல் 1 முதல் ஸ்மார்ட் ரேஷன் கார்டுகள் வழங்கப்படும்!

Webdunia
செவ்வாய், 24 ஜனவரி 2017 (15:39 IST)
இந்த கூட்டத்தில் உரையாற்றிய தமிழக ஆளுநர் வித்யாசாகர் ராவ், தமிழக மக்களின் வாழ்க்கை தரம் மேம்பட மாநில அரசு  அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டு வருகிறது. தமிழகத்தை முதல் மாநிலமாக்க வேண்டும் என்ற மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் கனவை நினைவாக்க பாடுபட வேண்டும் என கூறினார்.

 
இதனை தொடர்ந்து ஜல்லிக்கட்டு தொடர்பான தமிழக அரசின் அவசர சட்டம் நிரந்தரமானது. பொது விநியோக முறையில்  வெளிப்படைத் தன்மையை உறுதி செய்யும் விதமாக அனைத்து முறைகளும் கணினிமயமாக்கப்பட்டு வருகின்றன.
 
குடும்ப அட்டைகளை ஆதார் எண்ணுடன் இணைக்கும் பணிகள் விரைவில் முடிக்கப்பட்டு வரும் ஏப்ரல் 1-ம் தேதி முதல்  ஸ்மார்ட் ரேஷன் கார்டுகள் வழங்கப்படும் என அவர் தெரிவித்தார். மேலும் தம் உரையில் சட்ட ஒழுங்கில் தமிழகம் மற்ற  மாநிலங்களுக்கு முன்னுதாரணமாக செயல்படுவதாக கூறினார்.
அடுத்த கட்டுரையில்