தாத்தாவுக்கு ஏத்த பேரன்... உதயநிதியை பாராட்டிய சிவகுமார்!

Webdunia
வெள்ளி, 7 மே 2021 (12:36 IST)
தமிழக சட்டமன்ற தேர்தலில் திமுக தனிப்பெரும்பான்மை பெற்ற நிலையில் இன்று ஆளுனர் முன்பாக மு.க.ஸ்டாலின் முதலமைச்சராக பதவியேற்றார். இதை தொடர்ந்து பல்வேறு அரசியல், திரை பிரபலங்களும் அவருக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
 
இந்நிலையில் மு.க.ஸ்டாலினுக்கு வாழ்த்து தெரிவித்துள்ள நடிகர் சிவகுமார், திமுக தலைவர் முத்தமிழ் அறிஞர் டாக்டர் கலைஞர் அவர்கள் 5 முறை முதலமைச்சராக இருந்துள்ளார். கிட்டத்தட்ட 19 ஆண்டுகள் தமிழ்நாட்டை ஆண்டுள்ளார். கலைஞர்  மறைந்து 25 ஆண்டுகளுக்கு பின்னர் 125 இடங்களை பிடித்து தனிப்பெரும் கட்சியாக ஆட்சி அமைத்திருப்பது ஸ்டாலினின் இமாலய சாதனை. 
 
அதே போன்று உதயநிதி ஸ்டாலினும் முதல் தேர்தலிலே அமோக வெற்றிபெற்று தாத்தாவுக்கு ஏத்த பேரன் என நிரூபித்துவிட்டார் என கூறி முதல்வர் ஸ்டாலினிடம் சில கோரிக்கைகளை முன்வைத்துள்ளார். 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்