குற்றப்பத்திரிகை மற்றும் ஆவணங்களை கேட்ட செந்தில் பாலாஜி மனு.. தள்ளுபடி செய்த நீதிமன்றம்..!

Webdunia
செவ்வாய், 15 ஆகஸ்ட் 2023 (09:14 IST)
செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்டு சமீபத்தில் அமலாக்கத்துறை அதிகாரிகள் காவலில் எடுத்து விசாரணை செய்த நிலையில் விசாரணைக்கு பின்னர் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. 
 
இந்த நிலையில் செந்தில் பாலாஜி தரப்பிலிருந்து குற்றப்பத்திரிகை மற்றும் ஆவணங்களை கேட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது. ஆனால் இந்த மனு விசாரணைக்கு வந்த போது குற்றப்பத்திரிகை மற்றும் ஆவணங்களை கேட்ட மனுவை வலியுறுத்தவில்லை என்றும் காலையில் தாக்கல் செய்த மனுவை விசாரிக்கும்படி வலியுறுத்தவில்லை என்றும் செந்தில் பாலாஜி தரப்பில் நீதிமன்றத்தில் விளக்கம் அளிக்கப்பட்டது. 
 
குற்றப்பத்திரிகை மற்றும் ஆவணங்களை கேட்ட மனு வலியுறுத்தாததால் அந்த மனுவை தள்ளுபடி செய்து சென்னை முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி அல்லி உத்தரவிட்டு உள்ளார். குற்றப்பத்திரிகை மற்றும் ஆவணங்கள் கேட்டு காலையில் மனு தாக்கல் செய்த நிலையில் மாலையில் தள்ளுபடி செய்யப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்