சட்டப்பேரவையில் இருந்து வெளியேறியது ஏன்? ஆளுநரின் விளக்கம் சில நிமிடங்களில் நீக்கம்..!

Mahendran

திங்கள், 6 ஜனவரி 2025 (10:12 IST)
தமிழக ஆளுநர் இன்று சட்டமன்றத்தில் இருந்து உடனடியாக வெளியேறியது குறித்து, அவரது சமூக வலைதளத்தில் விளக்கம் அளிக்கப்பட்டதாகவும், ஆனால் சில நிமிடங்களில் அந்த விளக்கம் நீக்கப்பட்டதாகவும் வெளிவந்திருக்கும் தகவல் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

தமிழக சட்டமன்றம் இன்று கூடிய நிலையில், ஆளுநர் உரை வாசிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், சட்டமன்றத்தில் தமிழ்த்தாய் வாழ்த்துக்கு பதில் தேசிய கீதம் பாட வேண்டும் என்று ஆளுநர் கோரிக்கை வைத்ததாகவும், ஆனால் அவரது கோரிக்கையை ஏற்றுக்கொள்ளாமல் தமிழ் தாய் வாழ்த்து பாடியதை அடுத்து மூன்றே நிமிடங்களில் ஆளுநர் வெளியேறியதாகவும் தகவல் வெளியாகியுள்ளன.

இந்த நிலையில், சட்டப்பேரவையில் இருந்து ஆளுநர் வெளியேறியது குறித்து ஆளுநர் மாளிகை எக்ஸ் பக்கத்தில் விளக்கம் அளிக்கப்பட்டிருந்தது. அந்த விளக்கத்தில், "தமிழக சட்டப்பேரவையில் அரசியலமைப்பு சட்டம், தேசிய கீதம் மீண்டும் அவமதிப்பு. தேசிய கீதம் முதலில் பாட வேண்டும் என்ற எனது கோரிக்கை சட்டப்பேரவையில் நிராகரிப்பு" என்றும் பதிவு செய்யப்பட்டிருந்தது.

ஆனால், பதிவு செய்த ஒரு சில நிமிடங்களில் அந்த பதிவு நீக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. சட்டமன்றத்தில் ஆளுநர் வெளியேறியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Edited by Mahendran
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்