இந்த நிலையில், இன்று வாரத்தின் முதல் நாள் பங்குச்சந்தை உயரும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், இன்றும் சரிவுடன் தொடங்கி இருப்பது முதலீட்டாளர்களுக்கு அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
மும்பை பங்குச்சந்தை சென்செக்ஸ் இன்று காலை வர்த்தகம் தொடங்கிய போது ஏற்றத்தில் இருந்தாலும், தற்போது 29 புள்ளிகள் சரிந்து 79,089 என்ற புள்ளிகளில் வர்த்தகம் ஆகி வருகிறது.
அதேபோல், தேசிய பங்குச்சந்தையான நிஃப்டி 31 புள்ளிகள் குறைந்து 23,977 என்ற புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது.
இன்றைய பங்குச்சந்தையில் டைட்டான், பஜாஜ் பைனான்ஸ், இன்போசிஸ், டெக் மகேந்திரா, டிசிஎஸ், , ஐசிஐசிஐ வங்கி உள்ளிட்ட பங்குகள் ஏற்றம் கண்டுள்ளது.
சன் பார்மா, ஆக்சிஸ் வங்கி, , ஸ்டேட் வங்கி, மாருதி, எச்டிஎப்சி வங்கி, ஹிந்துஸ்தான் லீவர், ஆசியன் பெயிண்ட், டாடா ஸ்டீல், கோடக் மகேந்திரா வங்கி உள்ளிட்ட பங்குகள் குறைந்துள்ளதாக தகவல் நிலையாய் உள்ளது.