மக்கள் தொகை குறைவே காரணம் : கல்வி அமைச்சரின் புதிய கண்டுபிடிப்பு

Webdunia
வியாழன், 8 பிப்ரவரி 2018 (12:51 IST)
தமிழகத்தில் அரசு பள்ளிகளில் சேரும் மாணவர்களின் எண்ணிக்கை குறைவதற்கு மக்கள் தொகை குறைந்து வருவதே காரணம் என கல்வி அமைச்சர் செங்கோட்டையன் கூறியுள்ள கருத்து நகைப்பை ஏற்படுத்தியுள்ளது.

 
சமீபத்தில், தமிழகத்தின் அரசு பாடத்திட்டதில் சில மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் அரசு பள்ளிகளில் மாணவர்களின் எண்ணிக்கை உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
 
இது தொடர்பாக செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அமைச்சர் செங்கோட்டையன் “தற்போது அறிமுகப்படுத்தப்பட்டுள்ள பாடத்திட்டம் இந்தியாவே வியக்கும் வண்ணம் சி.பி.எஸ்.சி பாடத்திட்டத்தை மிஞ்சும் வகையில் இருக்கும். இதன் மூலம் அரசு பள்ளிகளில் சேரும் மாணவர்கள் எண்ணிக்கை அதிகரிக்கும். தற்போது அரசு பள்ளிகளில் மாணவர்களின் எண்ணிக்கை குறைவதற்கு மக்கள் தொகை குறைந்து வருவதே காரணம்” எனக் கூறினார்.
 
நாளுக்கு நாள் மக்கள் தொகை பெருகி வரும் சூழலில், அமைச்சர் செங்கோட்டையன் இப்படி கூறியிருப்பதை பலரும் கிண்டலடித்து வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்