நர்சிங் மாணவிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த மருத்துவர் கைது

Webdunia
வியாழன், 8 பிப்ரவரி 2018 (12:45 IST)
கோவை சிங்காநல்லூரில் நர்சிங் மாணவிக்கு மருத்துவரே பாலியல் தொந்தரவு கொடுத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தமிழகத்தில் பாலியல் தொல்லைகள் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது.  சில மனித மிருகங்கள் கற்பழிப்பதோடு பெண்களை கொலையும் செய்கின்றனர்.
 
இந்நிலையில் கோவை சிங்காநல்லூரைச் சேர்ந்தவர்  ரவீந்திரன் (47). இவர் நர்சிங் கல்லூரி நடத்தி வருகிறார். சம்பவத்தன்று நர்சிங் மாணவி ஒருவருக்கு உடல் நலக் குறைவு ஏற்பட்டது. சிகிச்சைக்காக மாணவி ரவீந்திரனை அணுகியுள்ளார். காய்ச்சல் குணமடைய ஊசி போடுவதாக கூறி, ரவீந்திரன் மாணவிக்கு மயக்க ஊசி செலுத்தியுள்ளார்.  மாணவி  மயக்கமடைந்ததும் ரவீந்திரன் மாணவியிடம் சில்மிஷத்தில் ஈடுபட்டார். அரை மயக்கத்தில் இருந்த மாணவி ரவீந்திரனின் பிடியில் இருந்து தப்பியோடி நடந்தவற்றை சக மாணவிகளிடம் கூறி அழுந்துள்ளார்.
 
இதனையடுத்து மாணவிகள் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். புகாரின்பேரில் சிங்காநல்லூர் போலீஸார் ரவீந்திரனை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்