அண்ணாமலை போல் அரசியல் செய்யவே ‘காமராஜர் ஆட்சி’.. செல்வப்பெருந்தகை திட்டம்..!

Siva
திங்கள், 20 மே 2024 (21:26 IST)
தமிழகத்தில் நோட்டாவுக்கும் கீழ் வாக்கு சதவீதம் வைத்திருந்த பாஜக தற்போது அண்ணாமலையின் எழுச்சி காரணமாக கிட்டத்தட்ட இரட்டை இலக்க வாக்கு சதவீதத்தை நெருங்கி விட்ட நிலையில் நம்மால் ஏன் முடியாது என்ற எண்ணத்தில் தான் காமராஜர் என்ற அஸ்திரத்தை செல்வப்பெருந்தகை  கையில் எடுத்துள்ளதாக கூறப்படுகிறது. 
 
தமிழகத்தில் காங்கிரஸ் தலைமையிலான காமராஜர் ஆட்சியை அமைப்போம் என செல்வப்பெருந்தகை  சமீபத்தில் கூறியது திமுக வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் எத்தனை ஆண்டுகள் தான் இன்னும் திராவிட கட்சிகளிடம் கையேந்திக்கொண்டு இருப்போம் என்று அவர் திமுகவை தான் மறைமுகமாக விமர்சனம் செய்து உள்ளார். 
 
மிகவும் குறைந்த வாக்கு சதவீதத்தை வைத்திருந்த பாஜக அண்ணாமலையின் எழுச்சி காரணமாக வளர்ந்து வரும் நிலையில் நாமும் அதிரடி அரசியல் செய்தால் அண்ணாமலை போல் பிரபலமாகலாம், காங்கிரஸ் கட்சியையும் வளர்க்கலாம் என்ற எண்ணம் தான் செல்வப்பெருந்தகை மனதில் எழுந்துள்ளதாக அவருக்கு நெருங்கிய வட்டாரங்கள் கூறுகின்றன. 
 
எனவே பாராளுமன்ற தேர்தல் முடிவு வெளியான பின் அவர் திமுகவையும் கடுமையாக விமர்சனம் செய்வார் என்றும் தமிழகத்தில் காமராஜர் ஆட்சி என்ற என்பதை மக்கள் முன் நிறுத்துவார் என்று கூறப்படுகிறது. 
 
Edited by Siva
 
 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்