ரஜினி வேண்டாம்; கமல் தான் வேணும்: சீமான் பச்சைக்கொடி!

Webdunia
வெள்ளி, 21 ஜூலை 2017 (15:50 IST)
நடிகர் ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவதை கடுமையாக விமர்சித்த, எதிர்த்த நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் நடிகர் கமல் அரசியலுக்கு வருவதை வரவேற்று பேட்டியளித்துள்ளார்.


 
 
கடந்த சில வாரங்களுக்கு முன்னர் நடிகர் ரஜினிகாந்த் தனது அரசியல் பிரவேசம் குறித்து ரசிகர்கள் சந்திப்பின் போது தெரிவித்தார். இதனையடுத்து தமிழக அரசியல் களத்தில் ரஜினியின் தாக்கம் அதிகமாக காணப்பட்டது.
 
ரஜினியின் அரசியல் பிரவேசத்தை பலரும் வரவேற்றாலும் நாம் தமிழர் கட்சியின்  தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கடுமையாக எதிர்த்தார். ரஜினி தமிழர் இல்லை என்பதே சீமான் எதிர்பின் பிரதான காரணம்.
 
இந்நிலையில் தற்போது நடிகர் கமல்ஹாசன் அரசியலுக்கு வந்துவிடுவாரோ என்ற பேச்சு அதிகமாக பேசப்படுகிறது. இதனையடுத்து இன்று மறைந்த நடிகர் சிவாஜி கணேஷனின் 16-வது நினைவு தினத்தையொட்டி அவரது சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்திய பின்னர் செய்தியாளர்களை சந்தித்தார் சீமான்.
 
அப்போது பேசிய சீமான், தமிழகத்தில் பல பிரச்சனைகளை இந்த மன்னும், மக்களும் எதிர்கொண்டு வருகிறார்கள். கமல்ஹாசன் இதனை கருத்தில் கொள்ள வேண்டும். என்னுடைய விருப்பம் அதுதான். கமல் அரசியலுக்கு வருவதை நான் வரவேற்கிறேன் என்றார்.
அடுத்த கட்டுரையில்