சின்மயி விவகாரம்: சட்டப்படி அணுக வேண்டும் என சீமான் சொல்வது சரியா?

Webdunia
திங்கள், 15 அக்டோபர் 2018 (07:24 IST)
வைரமுத்து மீது சின்மயி கூறிய பாலியல் குற்றச்சாட்டு குறித்து கருத்து கூறும் பலர் சின்மயி இத்தனை வருடங்களாக ஏன் இதை மறைத்தார்? என்றும், சின்மயி சட்டப்படி நடவடிக்கை எடுக்க ஏன் புகார் கூறவில்லை என்றும் கூறி வருகின்றனர்.

இந்த நிலையில் சின்மயி விவகாரம் குறித்து கருத்து கூறிய நாம் தமிழர் இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் சீமான், 'பிரபலங்களை அநாகரீகமாகப் பேசுவது நாகரீகமாகி வருகிறது. வைரமுத்து தவறு செய்திருந்தால் அவர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கலாம். தவறு செய்திருந்தால் தண்டிக்கப்படுவதில் நமக்கு பிரச்சினையில்லை! ஆனால் அதை விட்டுவிட்டு டுவிட்டரில் எழுதுவதன் மூலம் களங்கம் ஏற்படுத்துவது இவர்களது நோக்கத்தை சந்தேகிக்க வைக்கின்றது' என்று கூறியுள்ளார்.

இதற்கு முன்னர் அரசியல்வாதிகள் மீதும், குறிப்பாக பிரதமர், முதல்வர் மீதும் பல குற்றச்சாட்டுக்களை பொது மேடையில் பேசிய சீமான், எப்போதாவது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வழக்கு தொடுத்துள்ளாரா? பிரதமர் உள்பட பிரபலங்கள் மீது இவர் மேடையில் குற்றஞ்சாட்டினால் தவறில்லை, அதே பிரபலங்கள் மீது மற்றவர்கள் டுவிட்டரில் குற்றஞ்சாட்டுவது தவறா? என்ற கேள்வியை நெட்டிசன்கள் கேட்டு வருகின்றனர்.

இதிலிருந்து குற்றஞ்சாட்டப்பட்டவர் யார்? என்பதை பொருத்தே கருத்து சொல்பவர்களின் கருத்துக்களும் மாறுகிறது என்ற உண்மை தெரியவருகிறது

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்