பாடலாசிரியர் வைரமுத்து மீது பாடகி சின்மயி கூறிய பாலியல் குற்றச்சாட்டு விவகாரம் தற்போது விஸ்வரூபம் எடுத்துள்ளது. இதுவரை டுவிட்டரில் மட்டுமே குற்றஞ்சாட்டி வந்த சின்மயி தற்போது ஊடகங்களின் பேட்டி மூலம் குற்றஞ்சாட்ட தொடங்கிவிட்டார். எனவே வைரமுத்துவும் வெளியே வந்து விளக்கம் கொடுக்கும் நிலைக்கு தள்ளப்பட்டதால் அவர் சற்றுமுன் வீடியோ ஒன்றின் மூலம் தனது நிலை குறித்து விளக்கமளித்தார்.
இந்த நிலையில் வைரமுத்துவின் விளக்கத்திற்கு பதிலடி கொடுக்கும் வகையில் வைரமுத்துவுக்கு உண்மை கண்டறியும் சோதனை செய்ய வேண்டும் என்று சின்மயி தற்போது தனது டுவிட்டரில் கூறியுள்ளார். இதற்கு ஒரு டுவிட்டர் பயனாளி வைரமுத்துவுக்கு மட்டுமின்றி உங்களுக்கும் உண்மை கண்டறியும் சோதனை நடத்த வேண்டும் என்று கூற அதற்கு சின்மயி அவ்வாறு நடத்தினால் நான் நிச்சயம் வெற்றி பெறுவேன்' என்று பதிலளித்துள்ளார்.